![]() |
வவுனியாவில் மாணவர்கள் தடகள போட்டியில் சாதனை! Tamillk News |
Vavuniya Tamil News - வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலை மகள் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியானது இம்மாதம் 6,7,8,9,10 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.இப்போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களும் பங்குபற்றி வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
18வயதின் கீழ் இடம்பெற்ற ஆண்களுக்கான தட்டு எறிதல் போட்டியில் k.சுபிஸ்கரன் 3ஆம் இடத்தையும், 14வயதின் கீழ் பெண்கள் பிரிவினரின் 100m ஓட்ட போட்டியில் R. டர்சியா 3ஆம் இடத்தையும் 18தின் கீழ் பெண்கள் பிரிவினரின் 800m ஓட்ட போட்டியில் S. லிதுசா 4ஆம் இடத்தை பெற்றிருந்தனர்.
அத்துடன் 20 வயது ஆண்கள் பிரிவில் அ.கோகுலன் தட்டு எறிதலில் 6ஆம் இடமும், பெண்கள் பிரிவில் R.பிரேமிகா உயரம் பாய்தலில் 5ஆம் இடத்தையும் 16வயது ஆண்கள் பிரிவில் Y. சாருஜன் 6ஆம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும், வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.