வவுனியா இரட்டை கொலை: சிறையில் தொலைபேசி பாவித்த பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு Tamillk news- vavuniya news

 

tamillk news
வவுனியா இரட்டை கொலை: சிறையில் தொலைபேசி பாவித்த பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு Tamillk news

.வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருக்கு தொலைபேசி பாவித்தமைக்காக 4 மாத கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர்.



இச் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இந்நிலையில், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் கடந்த 24 ஆம் திகதி தொலைபேசி மீட்கப்பட்டதுடன், அதிலிருந்து 3292 வெளிச் செல்லும் அழைப்புக்கள் சென்றமை மற்றும் பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உரையாடியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.



தொலைபேசி பாவித்தமை தொடர்பில் சிறைச்சாலை திணைக்களமும் நீதிமன்றுக்கு தெரிவித்த நிலையில், தொலைபேசி பாவித்த குற்றத்திற்காக பிரதான சந்தேக நபருக்கு 4 மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்