வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் பிணையில் விடுதலை! vavuniya news

 

vavuniya news

கைது செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். 


வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டம் நேற்று (27.10) காலை இடம்பெற்ற போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இரு அணியினருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது. 


இது தொடர்பில் இரு பகுதியினரும் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி உட்பட 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 




கைது செய்யப்பட்ட 7 பேரும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (27.10) இரவு குறித்த 7 பேரையும் பொலிசார் பிணையில் விடுவித்துள்ளதுடன், இணக்க சபையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கையும் எடுத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்