யாழில் முக்கிய பொருளுடன் சிக்கிய சிறுவன் மற்றும் பெண்! tamillk news

tamillk news


jaffna news -  யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்புடன் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். 


ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் 1,500 மில்லி லீட்டர் கசிப்புடன் 17 வயது சிறுவனை கைது செய்தனர். 


அதேவேளை, பிறிதொரு இடத்திலும் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் 44 வயதுடைய பெண்ணொருவரை கைது செய்ததுடன், அவரது உடைமையில் இருந்து 5 லீட்டர் கசிப்பை மீட்டுள்ளனர். 





கசிப்புடன் கைது செய்யப்பட்ட இருவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்