25 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது! tamillk news

 

tamillk news

மன்னார் - முருங்கன் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.


மன்னார் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மன்னார், முருங்கன் பகுதியில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய ஐஸ் போதைப்பொருள் கடத்தல் வெற்றிகரமாக சுற்றிவளைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது.


மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான 178.75 கிராம் நிறை கொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


கடத்தலில் ஈடுபட்ட முக்கிய வியாபாரி அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் கடத்தலை மேற்கொண்ட முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.





தப்பி ஓடிய நபர் மற்றும் கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்