(trincomalee tamil news) திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுமேத்ராகம பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (09.04.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது 3 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் 84 பக்கற்றுகளாக பொதி செய்யப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளன.
இதேவேளை கைது செய்யப்பட்ட 36 வயதுடைய நபர், ஒரு போதை பொருள் வியாபாரி என்றும் அவர் மீது நீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் இன்று (10) நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.