அவுஸ்திரேலியா வெற்றி பெற 312 வெற்றி இலக்கு! tamillk news


tramillk news
 

2023 உலகக்கிண்ண போட்டித் தொடரில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு 312 என்ற வெற்றி இலக்கை தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்துள்ளது.



போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றது.


தென்னாபிரிக்கா அணி சார்பில் குவின்டன் டி கொக் 109 ஓட்டங்களையும், எய்டன் மெக்ரம் 56 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.


பந்து வீச்சில் மிட்சல் ஸ்டார்க் மற்றும் கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.


அதன்படி, அவுஸ்திரேலியா அணிக்கு 312 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்