லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்-tamillk news

.

tamillk news

srilanka tamil news -  இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் எதிர்வரும் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 


உலக சந்தையில் பதிவாகியுள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதன்படி, எரிவாயுவின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த மாத விலை திருத்தத்தின் படி 12.5 கிலோகிராம் எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்