லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு! tamillk nws

 

tamillk news-srilanka tamil news

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.


விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 343 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.


இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3470   ரூபாய் ஆகும்.


அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 1393 ரூபாவாகும்.




அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 650 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்