பாடசாலைப் பைகளை வகுப்பறையில் வைத்து விட்டு இரு சிறுமிகள் மாயம்! tamillk news

 

srilanka tamil news - tamillk news

நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் செயற்படும்  பிபில பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுமிகள் காப்பகத்தைச் சேர்ந்த  இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சிறுமிகள் இல்லத்தின் உதவி கண்காணிப்பாளர் பிபில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


இச் சிறுமிகள் தெபல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயின்று வருவதாகவும்   பாடசாலைப் பைகளை வகுப்பறையில் வைத்து விட்டு பாடசாலையை விட்டு வெளியேறியதாகவும் அதிபர் சிறுவர் இல்ல உதவி காப்பாளருக்கு அறிவித்துள்ளார்.


இதனையடுத்தே இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இவ்வாறு காணாமல் போன 16 வயதுடைய இரு சிறுமிகளைக் கண்டுபிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக  பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்