jaffna news - தமிழ்த் தேசியம் பேசும் இரட்டை வேடதாரிகளால் எங்களுக்கு நன்மை கிடைத்ததில்லை எனவும், தமிழ் கட்சிகள் எடுக்கும் முடிவுக்கு எதிராகவும் முன்னாள் போராளி ஒருவர் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அச்சுவேலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அதனால் அவர் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் தமிழ் கட்சிகள் தற்பொழுது கடையடைப்பை முன்னெடுப்பதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் இவ்வாறு செய்வதால் பாதிக்கப்படுவது மக்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல.
வெளிநாட்டு டொலருக்காகவும், பணத்துக்காகவும் இவ்வாறு இங்கு போராட்டங்களை செய்து தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்க செய்யும் செயற்பாட்டிற்கு மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்த கடையடைப்பு போராட்டத்தால் எதுவும் இடம்பெறப் போவதில்லை.
இவ்வாறு செய்வதால் மாணவர்களுடைய கல்வி, அத்தியாவசிய சேவை, வைத்தியசாலைகள், நோயாளர் பாதிப்புகள் என்பனவே இடம்பெறும்.
நான் ஒரு முன்னாள் போராளி, நாங்கள் யுத்தத்தால் பல்வேறு இழப்புக்களை சந்தித்தோம். ஆனால் தமிழ்த் தேசியம் பேசும் இந்த இரட்டை வேடதாரிகளால் எங்களுக்கு நன்மை எதுவும் கிடைத்ததில்லை.
இவர்கள் மேலும் மேலும் தமிழ் மக்களை பல்வேறு இன்னல்களுக்குள் மத்திக்கு கொண்டு செல்கின்றனர்.
இவர்கள் செய்யப் போகும் சாத்வீகப் போராட்டத்தினாலும் அல்லது கடையடைப்பு போராட்டத்தினாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.