கொழும்பில் பாரிய தீ விபத்து - பலர் வைத்தியசாலையில்!tamillk news

 

கொழும்பில் பாரிய தீ விபத்து - பலர் வைத்தியசாலையில்!tamillk news

கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் தீ பரவியுள்ளது.


இந்த தீ விபத்து இன்று   ஏற்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.


தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 7 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.


இன்றையதினம் வெள்ளிக்கிழமை என்பதன் காரணமாக, காலையில் ஊழியர்கள் வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் தீப்பற்றியிருக்கலாம் என அருகிலுள்ளவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 


உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமையே முழு கட்டிடத்திற்கும் தீ பரவியமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. 


மேலும், தீ பரவலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.  



அத்துடன் 22 பேர் வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்