பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களின் போராட்டம்! tamillk news

 

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களின் போராட்டம்! tamillk news

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ்  மக்களின் போராட்டம் மற்றும்  துஆ பிராத்தனை  இன்று (27) கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலின் அருகில்  இடம்பெற்றது.


பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இன்றுடன் பல நாட்களாக இடம் பெற்று வருகின்ற நிலையில்  யுத்தத்தினால் இதுவரையில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள்  மக்கள் உயிரிழந்துள்ளனர் .


பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில்  ஒன்று கூடிய பொது மக்கள் கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் பல்வேறு சுலோகங்களை ஏந்தி   துஆ பிராத்தனையில் ஈடுபட்டு அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.




அத்துடன் கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலில் இலங்கை மற்றும் பலஸ்தீன் கொடிகளை பொதுமக்கள் பறக்கவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்