பெண்கள், சிறுவர்களின் நிர்வாணப் புகைப்படங்களை இணையம் மூலம் விற்பனை..! செய்த இரண்டு இளைஞர்கள் கைது..! tamillk news

பெண்கள், சிறுவர்களின் நிர்வாணப் புகைப்படங்களை இணையம் மூலம் விற்பனை..! செய்த இரண்டு இளைஞர்கள் கைது..! tamillk news


 பெண்களின் நிர்வாண புகைப்படங்களை இணையம் மூலமாக விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள சந்தேகநபர்கள் இருவரும் 18 மற்றும் 19 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.


எதிர்வரும் முதலாம் திகதி வரை சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.


இதேவேளை  02 முதல் 07 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் சில பாலியல் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் விற்பனை செய்யும் மோசடி தொடர்பாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


இலங்கையில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்டுள்ள குழுவினால் மேற்கொள்ளப்படும் இந்த மோசடி மூலம் 1,000 ரூபாவில் இருந்து பல்வேறு விலைகளில் படங்கள் மற்றும் காணொளி விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.




மோசடியாளர்கள் இதை மிக நுணுக்கமாகச் செய்வதால் குழந்தைகளை எப்படி, எங்கு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயன்றதாக கூறப்படும் பண்டாரவளை சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரை பெற்றோர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

srilanka tamil news

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்