கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர்...! kilinochchi tamil news

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர்...! kilinochchi tamil news
 
கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இன்று மாலை சரியாக 6.05 மணியளவில், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அந்தவகையில் கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் கூடிநின்று தமது உறவுகளுக்கான அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

நினவேந்தலில் கலந்து கொண்ட மக்கள்  மண் மீட்புக்காய்  மாவீரர்களாகிப் போன தமது
உறவுகளை நினைந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மூன்று மாவீரர்களின் சகோதரியும், தமிழீழ மாவீரர் பணிமனையின் பொறுப்பாளர் பொன் தியாகம் அவர்களின் புதல்வியுமாகிய அனந்தி பிரதான சுடரினை ஏற்றி வைத்தார். 

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர்...! kilinochchi tamil news

அதுமட்டுமல்லாது “தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என  எழுச்சிப்பாடலுடன் ஆரம்பமான எழுச்சிப்பாடல்கள்  ஒங்கி ஒலிக்க உறவுகளின்  கண்ணீரில்  குளிக்கின்றது மாவீரர்  துயிலுமில்லங்கள்....

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்