16 வயதுடைய சிறுமி விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! srilanka tamil news

 கையடக்கத் தொலைபேசியினால் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார்.

srilanka tamil news


இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில், மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த மாணவியின் தந்தை வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது அவரது கையடக்கத் தொலைபேசியை காணவில்லையென தேடியுள்ளார்.


நீண்ட நேரம் தேடியும் கிடைக்காத காரணத்தினால் மனைவிக்கு அழைப்பினை எடுத்து இது தொடர்பில் வினவியுள்ளார்.


மனைவியும் கையடக்கத் தொலைபேசியை தான் எடுக்கவில்லையென கூறியுள்ளார்.


இதையடுத்து  கைத்தொலைபேசி மகளின் அறையில் இருப்பதை அவதானித்துள்ளார்.


அதன் பின் தந்தையின் கைத்தொலைபேசியை தரையில் வீசி உடைத்துள்ளார்.


இதனால் தந்தையுடன் மகளுக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகள் அறைக்குள் சென்று கதவை மூடி  விபரீத முடிவை எடுத்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணை

இது தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் தாயிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது,


எனது மகள் மிகவும் அறிவானவள்,  இந்த சம்பவம் இடம்பெறும் போது நான் வீட்டில் இருக்கவில்லை இருந்திருந்தால் இவ்வாறு இடம்பெற்றிருக்க விட்டிருக்க மாட்டேன்.



எனது கணவர் மிகவும் கோபமுடையவர், என்னையும் தினமும் அடித்து கொடுமை செய்வார். 


இருப்பினும் எனது மூன்று பிள்ளைகளுக்காக தான் நான் பொறுத்துக்கொண்டேன்.


அவர் எனது மகளை வகுப்புகளுக்கு கூட அனுப்புவது இல்லை.


வீட்டிலேயே அடைத்து வைத்துக்கொண்டிருப்பார். 


இந்த சம்பவத்தின் போதும் அவர் மகளை அடித்து திட்டியுள்ளார். 


இத்தகைய மன உளைச்சலுக்கு உள்ளானதால் தான் எனது மகள் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார். 



இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை அறிந்து கொள்வதற்கு WhatsAppல் இணைந்து கொள்ளுங்கள் Join Now
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்