(vavuniya tamil news -tamillk) வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களிற்கிடையில் ஏற்றப்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களிற்கிடையில் இன்றையதினம்(21) முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
முரண்பாடு முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது.
முறைப்பாடு
இதனால் ஆசிரியர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணை
இது தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக குழு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
செய்திகளை அறிந்து கொள்வதற்கு WhatsAppல் இணைந்து கொள்ளுங்கள்
Join Now



