யாழ் வடமராட்சி பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் இலவச ஆணுறை வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய வேலை திட்டம்
யாழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆணுறை வழங்கும் இயந்திரம் சில தினங்களுக்கு முன்னர் களவாடப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்துக்கு அமைவாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆணுறை வழங்கும் இயந்திரமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், குறித்த இலவச ஆணுறை வழங்கும் திட்டம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை அறிந்து கொள்வதற்கு WhatsAppல் இணைந்து கொள்ளுங்கள்
Join Now
Tags:
jaffna-news



