வவுனியாவில் உலக மண் தினத்தை முன்னிட்டு அரச உத்தியோகத்ர்தகள் வீதிகளில் சிரமதானம்! vavuniya news

வவுனியாவில் உலக மண் தினத்தை முன்னிட்டு அரச உத்தியோகத்ர்தகள் வீதிகளில் சிரமதானம்! vavuniya news

 

உலக மண் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீதிகளில் இருக்கும் கழிவு பொருட்களை அகற்றும் பணிகளை முன்னெடுத்தனர்.

 உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5ம் திகதி "உலக மண் தினம்”  கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சிரமதான பணியானது இன்று 9 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது.


இதன்போது ஆரம்பிக்கப்பட்ட சிரமதானத்தில் வீதி ஓரங்களில் இருக்கும் பொழுதின் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், ஆகியவை அகற்றப்பட்டன


வவுனியாவில் உலக மண் தினத்தை முன்னிட்டு அரச உத்தியோகத்ர்தகள் வீதிகளில் சிரமதானம்! vavuniya news



குறித்த செயல்பாடு ஆனது உலக மண் தினத்தில் பூமியின் மகத்துவத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் குறிக்கும் முகமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


குறித்த செயல்பாடு மூலம் பொதுமக்கள் அனைவரும் கவனத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் வீதியோரங்களில் பொலித்தின் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீதிகளில் வீசி விட்டு செல்லாமல் வவுனியா நகர சபையால் வீதி ஓரங்களில் வைக்கப்பட்டு இருக்கும் குப்பைகள் போடும் குப்பைத்தொட்டிகளில் போடுங்கள்.






இந்த பூமியின் மகத்துவத்தை ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பதற்கான கடமை காணப்படுவதால் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து எதிர்கால சந்ததியர்களுக்கு நல்ல ஒரு பூமியை வழங்கி செல்வதற்கு நாங்கள் நல்ல வழிகாட்டியாக காணப்பட வேண்டும் என்பது ஒவ்வொருவரும் இருக்கும் கடமையாகும்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்