யாழ் பல்கலைக்கழக மாணவி டெங்கு நோயால் உயிரிழப்பு ! jaffna news

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

jaffna tamil news


குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி மேலதிக சிகிச்சைக்காக

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.


இந்நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.




சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

jaffna tamil news


செய்திகளை அறிந்து கொள்வதற்கு WhatsAppல் இணைந்து கொள்ளுங்கள் Join Now


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்