கொழும்பு – 13 ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆமர்வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தீயணைப்பு படையினர் தீவிர நடவடிக்கை
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு படைக்கும் சொந்தமான 6 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
srilanka tamil news
செய்திகளை அறிந்து கொள்வதற்கு WhatsAppல் இணைந்து கொள்ளுங்கள்
Join Now
Tags:
srilanka



