5 வயது சிறுமி கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது! srilanka tamil news

 

tamillk news

சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் ருஹுனு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளர் ஒருவறினை கைது  செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்

குறித்த நபர் தத்தெடுக்கப்பட்ட ஐந்தரை வயது சிறுமி ஒருவரையே துன்புறுத்தியுள்ள நிலையில்  மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் கைது செய்துள்ளனர்.


குறித்த விரிவுரையாளர் சிறுமியை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்ட்டதுடன்  சிறுமியை ​பொலிஸ் காவலில் எடுத்து சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.




மேலும் பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுமி தாக்குதலுக்கு மற்றும் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்