(srilanka tamil news-tamillk) தலவாகலைக்கும் வட்டகொடையிற்கும் இடையில் சரக்கு ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையக பகுதிக்கான புகையிரத போக்குவரத்து தடை பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இன்றைய தினம் கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் சந்தேகம்
தொடர்ந்து மலையக பகுதிகளில் ரயில் தடம் புரண்டு வருகிறது.பயணிகள் அதிகளவில் போக்குவரத்துக்காக தற்போது ரயிலையே தேர்வு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ரயில்கள் அடிக்கடி தடம் புரண்டு வருவது நாசக்கார செயலாக இருக்கும் என பயணிகள் சந்தேகம் கொள்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
கோரிக்கை
அத்துடன் இனியும் மலையக பகுதிகளில் ரயில் தடம் புரள்வது இருக்க கூடாது எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் நலன் பேண முன் வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



