ஒன்றாக பிறந்த மூன்று சகோதரர்கள் : கல்வியில் படைத்த சாதனை...! srilanka tamil news

 

ஒன்றாக பிறந்த மூன்று சகோதரர்கள் :  கல்வியில் படைத்த சாதனை...! srilanka tamil news

காலி - மாபலகமவில் ஒரே நேரத்தில் பிறந்த மூன்று சகோதரர்கள், கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் மூவரும் 25 ஏ, சித்திகளையும் தங்கள் பெற்றோருக்குப் பரிசாகக் கொடுத்துள்ளனர்.


அனுத மினுல கஜநாயக்க, அகிந்து விருல கஜநாயக்க மற்றும் அமிரு சனுல கஜநாயக்க ஆகியோர் மாபலகமவில் பிறந்த சகோதரர்களாவர். இதன்படி அமிருவும் அகிந்துவும் 8 ஏ சித்திகளையும் 2 பி சித்திகளையும் பெற்று அதிக மதிப்பெண்களுடன் பரீட்சையில் சித்தியடைந்தனர்.


  5ஆம் புலமைப்பரிசில் பரீட்சியிலும் சாதனை படைத்துள்ளனர்

ஒன்றாகப் பிறந்த மூவரும் ஆரம்பக் கல்வியை நாகொட ஆரம்பப் பாடசாலையில் ஒன்றாகக் கற்றுதரம்  5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர்.



சகோதர்கள் 5ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்றனர். இந்நிலையில் காலி புனித அலோசியஸ் கல்லூரியில் சாதாரண தர பரீட்சையில் தோற்றி இந்தச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.



இதையடுத்து, தற்போது இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் மூவருமாக 25 ஏ சித்திகளையும் பெற்று பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளனர்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்