மின்வெட்டு தொடர்பில் புதிய தகவல்! srilanka tamil news

 நாட்டில் எதிர்வரும் வார விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

srilanka tamil news-tamillk news


இது தொடர்பில் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ x தளத்தில் பதிவொன்றியை இட்டு அறிவுறுத்தியுள்ளார்.

 நடவடிக்கைகள்

இதேவேளை அவசர பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


பராமரிப்பு நோக்கங்களுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவது தொடர்பில் சர்வதேச வழிகாட்டுதல்களின்படி செயற்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகள்

இதேவேளை, தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.




அத்துடன் வார இறுதியில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற பராமரிப்பு பணிகளால் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக பாரிய செலவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


செய்திகளை அறிந்து கொள்வதற்கு WhatsAppல் இணைந்து கொள்ளுங்கள் Join Now


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்