கில்மிஷா யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்- விமான நிலையத்தில் அமோக வரவேற்பு!

 (jaffna tamil news-tamillk) பலாலியில் அமைந்துள்ள   சர்வதேச விமான நிலையம் ஊடாக கில்மிஷா யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

jaffna tamil news


இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று நண்பகல் வேளை கில்மிஷா தனது குடும்பத்துடன் நாடு திரும்பினார்.

கௌரவிப்பு நிகழ்வுகள்

இதன்போது பெருமளவானவர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்து கில்மிஷாவை வரவேற்றனர்.


விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வாகன தொடரணி மூலம் அரியாலை பகுதிக்கு அழைத்து சென்று , அங்கு கௌரவிப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.


அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலைய முன்றலில் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் ) பிற்பகல் 3.30 மணிக்கு கௌரவிப்பு நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.


சாரங்கா இசைக்குழுவினரின் இசையில் கில்மிஷா சில பாடல்களையும் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்திய தொலைக்காட்சி சீ தமிழ் நடாத்திய சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிசா வெற்றியாளராக தெரிவாகியிருந்தார்.

jaffna tamil news


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்