(srilanka tamil news-tamillk) சிறுவர்கள் மத்தியில் சுவாச நோய்கள் அதிகரித்து வருவதுடன் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்துமாவும் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மழையுடனான காலநிலை காரணமாக
முக்கியமாக மேல் சுவாசக்குழாயில் வைரஸ் காய்ச்சல்கள் இருப்பதாகவும், இதன் காரணமாக இருமல், சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சில குழந்தைகளுக்கு வாந்தியும் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் வயிற்றுப்போக்கு அதிகரித்துள்ளதாகவும்,
வைரஸ் காய்ச்சலுக்குப் பின்னரே குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு அடிக்கடி ஏற்படுவதாகவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே 03 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், முழு இரத்த பரிசோதனை செய்து, டெங்கு பரவக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று வைத்தியர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



