இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு பெனின் மாநிலம் முதலீட்டு!

 

srilanka tamil news - tamil lk

இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு பெனின் மாநிலம் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் என அதன் உப தலைவர் திருமதி மரியம் சாபி தலதா உகாண்டாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தெரிவித்தார்.


பருத்தி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள பெனின் பருத்தித் தொழிலில் முதலீடு செய்வதற்கு இலங்கையின் ஆடைத் துறைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்த உப ஜனாதிபதி, அதற்கு இலங்கை முதலீட்டாளர்களை வழிநடத்துமாறு திரு.ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக் கொண்டார்.


உகாண்டாவின் கம்பாலா நகரில் நடைபெற்று வரும் அணிசேரா நாடுகளின் மாநாட்டை ஒட்டி இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


இதற்கிடையில், இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கான வீசா விலக்கு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இலங்கைக்கும் பெனின் நாட்டிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.




இரு நாடுகளின் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்கள் முன் விசா பெறாமல் முப்பது நாட்கள் வரை ஒரு நாட்டில் நுழைந்து தங்குவதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது.




இலங்கைக்கான வெளிவிவகார அமைச்சர் திரு. அலி சப்ரி, பெனின் வெளிவிவகார அமைச்சர் திரு. ஒலுஷேகுன் அட்ஜாதி பக்காரி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்