(srilanka tamil news-tamil lk news) இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை இன்று முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டைக்கு தட்டுப்பாடு
VAT அதிகரிப்பால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையை 35 ரூபாய்க்கு விற்க முடியாததால் சதொச விற்பனை நிலையங்கள் முட்டை விற்பனையை மட்டுப்படுத்தியுள்ளன.
அதன்படி சதொச விற்பனை நிலையங்களில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில், சந்தையில் உள்நாட்டு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.
இது குறித்து லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கையில்,
முட்டை இறக்குமதி
இலங்கை சந்தையில் கடந்த சில நாட்களாக முட்டை ஒன்று 42 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு முட்டை ஒன்று 52 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது
எனினும், சந்தையில் உள்நாட்டு முட்டைகள் மற்றும் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



