(vavuniya tamil news-tamil lk news) வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2529 வது நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டத்தில்
போராட்டம் ஆரம்பித்து 7வருடங்கள் நிறைவுற்ற நிலையில் (2529 ஆவது நாள்) இன்று (23.01.2024) மதியம் 12 மணியளவில் அவர்கள் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக உள்ள கொட்டகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே? வேண்டும் வேண்டும் எமது உறவுகள் வேண்டும், உறவுகளை மீட்க சர்வதேசம் வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பியவாறும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளைத் தாங்கியவாறு கதறி அழுது போராட்ட களத்தில் தமது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



