(srilanka tamil news-tamillk) மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03) முதல் மூன்று நாள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு மின்துறை அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக அதன் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
இதை ஜனாதிபதி ரணிலுடன் சேர்ந்து விற்க அமைச்சர் காஞ்சன விரும்புகிறார்.
பாரிய வேலை நிறுத்தத்தில்
இதை நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக நிறைவேற்றினால் இலங்கை மின்சார சபையில் பாரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடும். இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மூன்று நாட்களுக்கு மாபெரும் போராட்டம் நடத்த ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளோம்.
பாராளுமன்றத்திற்கு இதை கொண்டு வந்தால் அன்றைய தினம் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரையும் கொழும்புக்கு வரவழைப்போம் என அமைச்சர் காஞ்சனவுக்கு பகிரங்க சவால் விடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



