அரசாங்க ஊழியர்களின் சம்பளம் - ஓய்வூதியம்: தொடர்பாக வெளியான புதிய சுற்றறிக்கை! srilanka tamil news

 (srilanka tamil news-tamillk) வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, அரச சேவையில் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் - ஓய்வூதியம்: தொடர்பாக வெளியான புதிய சுற்றறிக்கை! srilanka tamil news

இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அமைச்சின் ஏனைய செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு நேற்று (10) வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு

குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, அரச அதிகாரிகளின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அமைச்சின் ஏனைய செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு நேற்று (10) வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் ஓய்வூதிய பங்களிப்பு

குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, அரச அதிகாரிகளின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவின் நிலுவைத் தொகையை, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மாதாந்தம் 5,000 ரூபா செலுத்தப்பட வேண்டும்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதிய பங்களிப்பாக அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 8 வீதம் அறவிடப்படும்.

இந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள், சாதாரண தினக்கூலி பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கும் செல்லுபடியாகும்.

2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, ஓய்வு பெற்றவர்களுக்கான தற்போதைய வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு இந்த ஆண்டு ஏப்ரல் முதல் 2,500 ஆல் அதிகரிக்கப்பட வேண்டும்.

வாழ்க்கைச் செலவு

ஓய்வூதியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 3,525 ரூபாவிலிருந்து 6,025 ரூபாவாக அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்