ஹூத்திகளுக்கு எதிராக இலங்கை கடற்படை கப்பல்கள் தயார் நிலையில்...!

 (srilanka tamil news-tamillk) செங்கடலில் ஹூத்தி போராளிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையின் விஜயபாகு - கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஹூத்திகளுக்கு எதிராக இலங்கை கடற்படை கப்பல்கள் தயார் நிலையில்...!


இந்நிலையில் குறித்த கப்பல் புறப்படுவதற்கான திகதி மட்டும் வெளியிடப்படவில்லை எனவும், இதில் ஒரு கப்பலில் சமார் 100 மாலுமிகள் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பல்கள் ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செங்கடலுக்கு

மேலும் கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இலங்கை கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று செங்கடலுக்கு அனுப்பப்படும் என அறிவித்திருந்தார்.



"உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளது. அதேபோல் காசாவிலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், பொருட்களின் விலை அதிகரிக்கலாம். ஹூத்திகள் செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை நோக்கி ஏவுகணைகளை வீசுவதால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.



இந்தக் கப்பல்கள் செங்கடலில் இருந்து வராமல் தென்னாப்பிரிக்காவைச் சுற்றி வந்தால் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கப்பல்களை பாதுகாக்க இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளோம்.” என தெரிவித்திருந்தார்.



செங்கடல் அச்சுறுத்தல் காரணமாக, வியாழன் இரவு யேமனில் உள்ள பயங்கரவாத இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் கூட்டாகத் தாக்குதல் நடத்தியது. ஹூத்திகள் யேமனில் உள்ள ஷியா முஸ்லிம் சிறுபான்மையினரான ஜைதிகளின் துணைப் பிரிவைச் சேர்ந்த ஆயுதக் குழுவாகும்.




குறிப்பாக ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் யேமன் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவிற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்