கோழி பணிஸுக்குள் பாம்பு; அதிர்ச்சியடைந்த பெண்!

  

Tamil lk News

இந்தியாவின், தெலுங்கானா மாநிலத்தில் பேக்கரி ஒன்றில் வாங்கிய கோழி பணிஸில் இறந்த நிலையில் பாம்பு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லாவில் உள்ளூர் பேக்கரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



ஸ்ரீசைலா என்ற பெண் நேற்று அங்கு, தனது குழந்தைகளுக்காக ஒரு முட்டை பணிஸ் மற்றும் ஒரு கோழி பணிஸ் வாங்கி சென்றுள்ளார். 



வீட்டில் கோழி பணிஸ் பார்சலை திறந்தபோது உள்ளே இறந்த சிறிய பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 


உடனடியாக அதை எடுத்துக்கொண்டு பேக்கரிக்குச் சென்று கேட்டுள்ளார். ஆனால் பேக்கரி உரிமையாளர்  அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது.



இதையடுத்து கோபமடைந்த  குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 



இதையடுத்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்