(vavuniya tamil news-tamil lk news) வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அடித்து சேதப்படுத்தியதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனம் தெரியாத குழு
குறித்த வீட்டில் கணவன் தொழில் நிமித்தம் வெளியே சென்ற சமயத்தில் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் தனிமையில் இருந்துள்ளனர்.
இதன் போது வீட்டிற்குள் உள் நுழைந்த 5 பேர் கொண்ட இனம் தெரியாத குழு ஒன்று வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியினை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிசார் விசாரணை
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
Vavuniya-news



