இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்!

 இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி உடல் நலக் குறைவு காரணமாக இன்று (25) காலமாகியுள்ளார்.

tamil lk news


புற்றுநோயால் 5 மாதங்களாக பாதிக்கப்பட்டு, இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே பவதாரணி காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. 

மறைவுக்கு திரையுலக பிரபலங்கள்

பின்னணி பாடகி மாத்திரமன்றி, பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பவதாரணி இசையமைத்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  



இதேவேளை, இசைஞானி இளையராஜாவின் விசேட இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், அது தொடர்பான விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்