இன்றைய ராசிபலன்-30-01-2024

tamil lk news


 மேஷம்: தோல்வி பயம் நீங்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். சகோதரர்கள் உதவுவர். வரவேண்டிய பாக்கியை வசூல் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் உண்டு.


ரிஷபம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். குழப்பங்கள் நீங்கி கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும்.

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அலைச்சல் குறையும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.


கடகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.


சிம்மம்: வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர். மகன், மகளின் திருமணம் சிறப்பாக நடத்துவீர்.


கன்னி: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர். முக்கிய பிரமுகர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். மனஇறுக்கம் நீங்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. வழக்கு சாதகமாகும். புதிய வீடு வாங்க கடனுதவி கிடைக்கும்.

துலாம்: சில காரியங்களை போராடி முடிக்க வேண்டும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தரவேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.


விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உங்களுடைய பலம், பலவீனங்களை உணர்ந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள்

தனுசு: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். தாயார், பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.


மகரம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு உண்டு. பயணங்கள் திருப்தி தரும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள்.


கும்பம்: தடுமாற்றங்கள் நீங்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர். எடுத்த காரியங்களை முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். சக ஊழியர் தொல்லை நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.


மீனம்: சிக்கலான, சவாலான காரியங்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருக்காதீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்