யாழ். பருத்தித்துறை கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29.01.2024) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே 10 கடற்றொழிலாளர்களும் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 9 மாதங்கள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் 10 கடற்றொழிலாளர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கடற்றொழிலாளர்களிடம் கைப்பற்றப்பட்ட படகினை அரச உடைமையாக்குமாறும் கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசி உள்ளிட்ட வேறு உடைமைகளை மீள வழங்குமாறும் நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் பொலிஸாரக்கு பணித்துள்ளார்.
மேலும், விடுதலை செய்யப்பட்ட 10 கடற்றொழிலாளர்களையும் மிரிஹான முகாமிற்கு அனுப்பி, இந்தியாவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், படகு உரிமையாளருக்கான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



