இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கிளிநொச்சியில் மாவீரர்களுக்கு தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
திருகோணமலையில் இன்று இலங்கை தமிழரசு கட்சிக்கான தலைமை பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.இதில் 184 வாக்குகளை பெற்று சிறிதரன் வெற்றி பெற்றார்.
பூஜை வழிபாடு
இதனையடுத்து கிளிநொச்சிக்கு திரும்பிய சிறிதரன் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலயத்தில் மகத்தான வரவேற்பும் பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
kilinochchi




