இரண்டு சிறுவர்கள் போதையில் யாழில் வைத்தியசாலையில் அனுமதி! Jaffna tamil news

 (jaffna tamil news ) யாழில் இரண்டு சிறுவர்கள் போதையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

jaffna tamil news-tamil lk


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஒன்றுவிட்ட சகோதரனால் கசிப்பு பருக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


4 மற்றும் 7 வயதான இரண்டு சிறுவர்கள் மதுபோதையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தாயாரால் அனுமதிக்கப்பட்டனர்.



குறித்த இரு சிறுவர்களுக்கு தாயாரின் சகோதரியின் மகனால் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 மேலதிக சிகிச்சை

அதேவேளை குறித்த இரண்டு சிறுவர்களும் அதிகமான போதையில் இருந்ததால்,  மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்