வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து நேற்று (11.01.2024) காலை 10 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பல்வேறு கோரிக்கையுடன் போராட்டம்
சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 30 நிமிடங்கள் அமைதியான முறையில் இப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
வைத்தியசாலை சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறை வழங்கி கடமையிலிருந்து விலகி குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |