(jaffna tamil news-tamal lk news) யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது இன்றைய தினம் (26.01.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கோப்பாய் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
jaffna-news



