12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் rasi palan tamil -27-01-2024

 

tamil lk news

மேஷம்: தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவர். பணவரவு திருப்தி தரும்.


ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். தாயாரின் உடல் நிலை சீராக அமையும். அலைச்சல், குறையும். பழைய வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.

மிதுனம்: பிரபலங்களுக்கு நெருக்கமாவீர். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டுவார். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும்.


கடகம்: வெகு நாட்களுக்கு பிறகு சிலரை சந்திப்பீர். மனைவிவழி உறவினர்களால் நிம்மதியுண்டு. உடல்சோர்வு, தலைவலி விலகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. வாகன பழுது நீங்கும். புதிய வீடு வாங்குவீர்.


சிம்மம்: சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். பழைய வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். அவசரப்பட்டு அடுத்தவரை விமர்சிக்க வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.


கன்னி: நினைத்த காரியம் நிறைவேறும். மனக் குழப்பம் நீங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு.

துலாம்: வீண் விவாதங்களை குறைத்து தெளிவான முடிவுகளை எடுப்பீர். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய வழக்குகள் சாதகமாகும். பணவரவு உண்டு.



விருச்சிகம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தாயார், பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

தனுசு: வேற்றுமொழி பேசுபவர், வேற்று மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.


மகரம்: வீண் விவாதங்களை தவிர்த்து குடும்பத்தில் அனுசரித்து போவது நல்லது. மன இறுக்கம், உடல் சோர்வு வந்து போகும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். யாருக்கும், எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.


கும்பம்: குழப்பங்கள் நீங்கி வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபமீட்டுவீர்கள். தாய்வழி உறவினர்கள், பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவர்.



மீனம்: திட்டமிட்ட வேலைகளை தாமதமின்றி முடிப்பீர்கள். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்