நுவரெலியா கிரகரி வாவியில் மிதக்கும் சடலம்! srilanka tamil news

 நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் சடலமொன்று மிதப்பதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

srilanka tamil news-tamil lk


கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக, இன்று சனிக்கிழமை (27.01.2024) பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். 


இந்நிலையில், குறித்த மிதக்கும் சடலம் இராமன் பத்மநாதன் வயது (64) என்பவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


தொடர்ந்து, நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வைத்திய பரிசோதனை

குறித்த நபர் வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது அந்த நபரை எவராவது கொலை செய்து வாவியில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


மேலும், மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்