கத்தியால் பலரை தாக்கிய நபரால் பரபரப்பு!

 (srilanka tamil news-tamil lk) தங்காலையில் கத்தி வைத்திருந்த நபர் ஒருவர் பலரை தாக்கி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

srilanka tamil news-tamil lk


தங்காலை நகரின் மையப்பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் இருந்த நபர் மீது கத்தியை ஏந்திய நபர் தாக்கியதுடன், தாக்குதலை தடுக்க தலையிட்ட நபர்களையும் அவர் தாக்கியுள்ளார்.


இந்த சம்பவம் அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.


பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தாக்குதலின் காரணமாக ஒருவர் காயமடைந்து தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.


இது தொடர்பில் தங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்