(srilanka tamil news) மீரிகம - பஸ்யாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் உத்தியோகத்தியாகத்தர்
அம்பேபுஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த வரகாப்பொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மீரிகமவில் இருந்து பஸ்யாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் அதே திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளை கடந்து செல்லும் போது எதிர்த்திசையில் வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானார்.
விபத்துக்குள்ளாக பெண் பொலிஸ் உத்தியோகத்தியாகத்தர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
accident



