வவுனியாவில் 125 பேருக்கு விவசாய பயிர் பாதுகாப்பு துப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டது! tamil lk news

 (vavuniya news) வவுனியா மாவட்டத்தில் 125 பேருக்கு விவசாய பயிர் பாதுகாப்பு துப்பாக்கிகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

tamil lk news


வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இன்று இந்நிகழ்வு இடம்பெற்றது.


யுத்தத்தால் பாதிப்படைந்த வவுனியா மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் விலங்குகளால் விவசாய செய்கைக்கு சேதம் ஏற்படுத்தப்டபட்டு வருகின்றது.

இதன் காரணமாக, பல விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் என்பன பாதிப்படைந்துள்ளன.

இதனால் விவசாயிகளின் விவசாய செய்கைக்யை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 125 பேருக்கு குறித்த விவசாய பாதுகாப்பு துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்