பாடசாலையில் திடீரென மயங்கிய மாணவர்கள்! ஒருவரின் நிலை கவலைக்கிடம்! tamil lk news

 (srilanka tamil news) ஆரம்ப பாடசாலை ஒன்றின் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் நால்வர் மரத்தடியில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

tamil lk news


நேற்று வெள்ளிக்கிழமை (16) இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை நான்கு மாணவர்களும் மரத்தடியிலிருந்து ஏதோ மாத்திரைகளை உட்கொண்டதாக அங்கிருந்த எனைய மாணவர்கள் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த நிலையில் மாணவர்களுக்கு மாத்திரைகளை யாராவது கொடுத்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்