யாழில் மாணவன் மீது ஆசிரியர் ஈவிரக்கமின்றி தாக்குதல்....! tamil lk news

jaffna tamil news


 (jaffna tamil news) யாழில் சிறுவர் இல்ல மாணவனை ஆசிரியர் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

உடலில் காயங்கள் ஏற்படும் வகையில்

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் இந்த மாணவனை விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் அழைக்க, மாணவன் அந்த இடத்துக்குச் செல்லவில்லை. இதனால் கோபமடைந்த ஆசிரியர், உடலில் காயங்கள் ஏற்படும் வகையில் மாணவனை தடியால் அடித்துள்ளார்.

ஆசிரியரியரின் இந்த முரட்டுத்தனமாக தாக்கியதில் சிறுவனின் கைகளில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இந்நிலையில் ஆசியரின் மிருகத்தனமான தாக்குல் அப்பாடசாலை மாணவ்ர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்