மன்னாரில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் - வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை! tamil lk news

 மன்னார் – தலைமன்னாரில் உயிரிழந்த 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.


தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இன்றையதினம் (17) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


குறித்த சிறுமி நேற்று முன்தினம் (15) மாலை காணாமற்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

tamil lk news


இதனையடுத்து, பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது, தென்னந்தோட்டத்தில் இருந்து நேற்று (16) காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.


சிறுமியின் தாயும் தந்தையும் புத்தளம் – பூக்குளம் கிராமத்தில் வசித்து வருவதுடன், பாடசாலை செல்வதற்காக சிறுமியும் அவரது இரு மூத்த சகோதரிகளும் சகோதரனுடன் ஊர்மனை கிராமத்திலுள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்துவந்துள்ளனர்.


நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் உயிரிழந்த சிறுமி மூன்றாவது பிள்ளையாவார்.


சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை – குச்சவௌியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


சம்பவத்துடன் தொடர்புடைய சில சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


காணாமல் போன சிறுமியை தேடும் நடவடிக்கையில் பிரதேச மக்கள் ஈடுபட்டதுடன், நேற்று காலை 6.15 அளவிலேயே சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

மக்களால் கவனயீர்ப்பு

சட்ட வைத்திய அதிகாரியும் மன்னார் மாவட்ட பதில் நீதவானும் சிறுமியின் சடலத்தை பார்வையிட்டு செல்லும் போது, சிறுமிக்கு நீதி கோரி பிரதேச மக்களால் கவனயீர்ப்பும் முன்னெடுக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்